என் மலர்

  ஆன்மிகம்

  சோலைமலை முருகன்
  X
  சோலைமலை முருகன்

  சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.
  அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையையொட்டி நேற்று முதல் சோமவார பூஜைகள் நடந்தது. இதில் சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்து அருள்பாலித்தார்.

  பின்னர் சஷ்டி மண்டபத்திலிருந்து மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முன்னதாக மூலவர் சுவாமி, வித்தக விநாயகர், மற்றும் வேல்சன்னதியிலும் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×