என் மலர்

  ஆன்மிகம்

  நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தபோது எடுத்த படம்
  X
  நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தபோது எடுத்த படம்

  ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது.
  நாமக்கல்லில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் நேற்று 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர்.

  நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் மகா சங்கல்பமும், கணபதி பூஜையும் நடந்தது. பின்னர் பால தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

  Next Story
  ×