search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரான்மலையில் மெகா கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட காட்சி.
    X
    பிரான்மலையில் மெகா கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட காட்சி.

    2,500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

    கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாளில் பிரான் மலையை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிரான்மலை கார்த்திகை தீபம் பார்த்தவுடன் தான் விரத வழிபாட்டை நிறைவேற்றுவார்கள் என்பது சிறப்பு.
    சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்திற்கு கட்டுப்பட்ட மங்கை பாகர் தேனம்மை திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தன்று இந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கார்த்திகை மகா தீபத்தை வணங்கிய பின்னரே கார்த்திகை விரதம் வழிபாடு நிறை வேற்றுவது வழக்கமான ஒன்று.

    இந்த ஆண்டு கார்த்திகை திதி நேற்றுமுன்தினம் மாலை ஆரம்பமாகி நேற்று நண்பகல் முடிந்தது. இதையடுத்து 2,500 அடி உயர பிரான்மலையில் காத்திகை மகா தீபம் ஏற்றப் பட்டது. முன்னதாக மெகா திரி தயார் செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள மெகா கொப்பரையில் சுமார் 100 லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டு வழிபாடு நடத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கும் மலை தீபம் ஏற்றப்பட்டது.

    முன்னதாக நேற்று காலை பிரான்மலை அடிவாரத்தில் உள்ள அம்பாளுக்கும் வள்ளி தெய்வானையோடு உள்ள முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலை தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலில் லட்ச தீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து அன்னதான விழாவை சிங்கம் புணரி ஆன்மிக நண்பர்களுடன் இணைந்து பிரான்மலை கிராமத்தார்கள் வழங்கினர்.

    கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாளில் பிரான் மலையை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிரான்மலை கார்த்திகை தீபம் பார்த்தவுடன் தான் விரத வழிபாட்டை நிறைவேற்றுவார்கள் என்பது சிறப்பு.

    கார்த்திகை மாத பவுர்ணமி அருணாச்சலேசுவரருக்கு உகந்த நாளையொட்டி பிரான்மலை பகுதியில் கார்த்திகை கிரிவலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×