search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கோஷ்டியூர் திருப்பாற்கடல் குளத்தில் 16 ஆண்டுகளுக்குபின் கிருத்திகை தீபம் ஏற்றம்
    X
    திருக்கோஷ்டியூர் திருப்பாற்கடல் குளத்தில் 16 ஆண்டுகளுக்குபின் கிருத்திகை தீபம் ஏற்றம்

    திருக்கோஷ்டியூர் திருப்பாற்கடல் குளத்தில் 16 ஆண்டுகளுக்குபின் கிருத்திகை தீபம் ஏற்றம்

    பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் எதிரே அமைந்துள்ள திருப்பாற்கடல் குளத்தில் கடந்த 2004-ம் ஆண்டு நிரம்பிய போது கிருத்திகை தீபம் ஏற்றப்பட்டது.
    திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவில் எதிரே அமைந்துள்ள திருப்பாற்கடல் குளத்தில் கடந்த 2004-ம் ஆண்டு நிரம்பிய போது கிருத்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் குளத்தில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்தநிலையில் தற்போது தொடர் மழை மற்றும் தண்ணீர் வரத்து காரணமாக கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.

    இதையடுத்து நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் குளத்தில் கிருத்திகை தீபம் உற்சவம் நடைபெற்றது. அப்போது குளத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோவிலில் உற்சவர் சவுமிய நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×