என் மலர்

  ஆன்மிகம்

  சுசீந்திரம் கோவில்
  X
  சுசீந்திரம் கோவில்

  சுசீந்திரம் கோவிலில் கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்க ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது

  இதையொட்டி தினமும் காலை 10.15 மணிக்கு தாணுமாலய சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன சாத்தும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு கோவில் முழுவதும் தீப வரிசைகள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும், பஞ்சாட்சர ஜெப யோகமும், இரவு 7.30 மணிக்கு கோவில் திருச்சுற்றில் ஞான பிரகாசராய் விளங்கும் தாணுமாலயசாமி ரிஷப வாகனத்திலும், தீப பிரகாசராய் திகழும் திருவேங்கட விண்ணவ பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

  இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலய தொண்டர்கள் அறக்கட்டளையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×