
இந்த திருவிழாவையொட்டி நாதஸ்வரம், பேண்டு வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், வாணவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆண்டனி அல்காந்தர், பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச்செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் ஜேக்கப் ஆஸ்லின், ஜெப மெர்ஜின், கிங்ஸிலி ஷாஜு மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.