என் மலர்

  ஆன்மிகம்

  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்
  X
  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்

  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.42 மணி முதல் 9.45 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

  6-ந் தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி வேட்டை சிவன் கோவிலுக்கு சாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11-ந் தேதி தேதி சாமி தளியல் ஆற்றுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

  திருவிழா நாட்களில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதேநேரத்தில் திருவிழா நாட்களில் நடத்தும் வழிபாடுகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ள கதகளி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. திருவிழாவையொட்டி நாகர்கோவிலை சேர்ந்த சிவ திருச்சிற்றம்பலம் குழுவினர் கோவில் சுற்றுப்புறத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
  Next Story
  ×