என் மலர்

  ஆன்மிகம்

  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தெய்வானை.
  X
  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தெய்வானை.

  ஐப்பசி பூரம் விழா: திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தெய்வானை புறப்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் கோவிலில் சிம்மாசனத்தில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பூரத்திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதத்தில் நடைபெறும் பூரத்திருவிழாவில் கோவர்த்தனாம்பிகையும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் பூரத்திருவிழாவில் தெய்வானை அம்பாள் மட்டும் எழுந்தருளி நகர்வலம் வந்து அருள்பாலிப்பது வழக்கம்.

  இந்த நிலையில் ஐப்பசி மாதபூரத்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

  இதனையடுத்து தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகைகளுடன் புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது. அவை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இந்த நிலையில் சிம்மாசனத்தில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.
  Next Story
  ×