என் மலர்

  ஆன்மிகம்

  யாகம்
  X
  யாகம்

  அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் 20-ந் தேதி தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்த்தாண்டம், பம்மம் ஆதிமூலை அம்மன் கோவிலில் மகா தன்வந்திரி யாகம் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது.
  கொரோனா வைரஸ் உலகை விட்டு நீங்கவும், உலக மக்கள் நன்மைக்காகவும் மார்த்தாண்டம், பம்மம் ஆதிமூலை அம்மன் கோவிலில் மகா தன்வந்திரி யாகம் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் கோடி நாம ஜெப வேள்வி நடக்கிறது. நிகழ்ச்சியில் சுவாமி பிரணவானந்த மகராஜ் தலைமை தாங்குகிறார்.

  இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரசின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து முககவசம், சமூக இடைவெளியுடன் வழிபட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா உத்தமன்குட்டி மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
  Next Story
  ×