என் மலர்

  ஆன்மிகம்

  மாசாணியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்களை படத்தில் காணலாம்.
  X
  மாசாணியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்களை படத்தில் காணலாம்.

  மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
  ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வழக்கமாக அமாவாசை நாட்களில் கோவில் நடை விடிய, விடிய திறந்து இருக்கும். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளன. இதன் காரணமாக கோவில் நடை விடிய, விடிய திறக்கப்படவில்லை.

  வழக்கம் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணியம்மனை தரிசனம் செய்தனர். அமாவாசையொட்டி பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

  இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவில் கடந்த 5-ந்தேதி திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் உள்ளிட்ட அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை வாங்குவதில்லை. இதற்காக தனியாக ஒரு பெரிய பாத்திரம் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பக்தர்கள் பொருட்களை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

  இதேபோன்று அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன், கரியகாளியம்மன், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  Next Story
  ×