search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமான்
    X
    சிவபெருமான்

    இறைவனும்... நைவேத்தியங்களும்...

    இறைவனை வழிபடும் போது, அவருக்கு நைவேத்தியங்கள் படைத்து வணங்குவது வழக்கம். அப்படி படைக்கப்படுவதில், எந்த தெய்வத்திற்கு எந்த நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
    சிவபெருமான்: ஈசனுக்கு வெறும் அன்னத்தை நைவேத்தியமாக படைத்தாலே, அவர் அருளைப் பெறலாம். மேலும் வெண் பொங்கல், வடை போன்றவற்றை படைப்பதன் மூலமாகவும் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

    பெருமாள்: மகாவிஷ்ணுக்கு, ‘இந்த நைவேத்தியம்தான் பிடிக்கும்’ என்று இல்லை. ஆனால் மஞ்சள் நிற உணவு வகைகளை அவருக்கு பிடித்தமானதாக அனைவரும் கருதுகிறார்கள். குறிப்பாக லட்டு, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் போன்றவை.

    கிருஷ்ணர்: கிருஷ்ணரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும், அவருக்கு வெண்ணெய்தான் பிடித்தமான நைவேத்தியம் என்று. அதோடு குசேலர் கொடுத்த அவல் மீதும் அவருக்கு பிரியம் உண்டு.

    சரஸ்வதி

    சரஸ்வதி: கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு, வெண் பொங்கல்தான் பிரசித்தமான நைவேத்தியம்.

    விநாயகர்: முழுமுதற்கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு, ஏராளமான உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைப்பார்கள். குறிப்பாக மோதகம், அவல் - பொரி, சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம், முக்கனிகள்.

    முருகன்: குறிஞ்சி நிலத்து கடவுளாக வர்ணிக்கப்படுபவர், முருகப்பெருமான். எனவே அவருக்கு தினைமாவு நைவேத்தியம் பிடித்தமான உணவு. மேலும் பழங்கள், வெல்லம், வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு போன்றவையும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    மகாலட்சுமி: செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமிக்கு, அரிசிப் பாயசம் என்றால் மிகவும் பிரியம். மேலும் அனைத்து வகையான இனிப்பு பலகாரங்களும் இந்த தேவிக்கு படைப்பார்கள்.

    ராகு-கேது: இவர்கள் அசுர ரூபங்கள் என்பதால், இவர் களுக்கு கருப்பு நிற உணவுப் பொருட்களான கடுகு, கருப்பு எள்ளில் செய்த உணவுகள் நைவேத்தியமாக படைப்பார்கள்.
    Next Story
    ×