search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவத் கீதை
    X
    பகவத் கீதை

    பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை...

    பகவத் கீதையில், மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ‘நான்கு’ விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    கண்ணபிரான், அர்ச்சுனனுக்கு உபதேசித்த ‘பகவத் கீதை’, இந்து மதத்தின் ஐந்தாவது வேதமாக போற்றப்படுகிறது. இந்த பகவத் கீதையில், மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ‘நான்கு’ விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தினமும் செய்ய வேண்டியவை

    * தியானம்
    * நூல் வாசிப்பு
    * உடற்பயிற்சி
    * சேவை செய்தல்

    சேர்ந்திருக்க வேண்டியவர்கள்

    * மனத் தூய்மை உள்ளவர்
    * வாக்கை நிறைவேற்றுபவர்
    * கண்ணியம் தவறாதவர்
    * உண்மையை உரைப்பவர்

    நட்பு கொள்ளக் கூடாதவர்கள்

    * பொய் பேசுபவன்
    * பொறாமை கொண்டவன்
    * துரோகம் செய்தவன்
    * ஆணவம் பிடித்தவன்

    புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்

    * சுயநலக்காரன்
    * மடையன்
    * ஓய்வாக இருப்பவன்
    * முட்டாள்

    அணிய வேண்டிய ஆபரணங்கள்

    * பொறுமை
    * சாந்த குணம்
    * அறிவு
    * அன்பு

    விலக்க வேண்டியவை

    * துக்கம்
    * கவலை
    * இயலாமை
    * கஞ்சத்தனம்

    குறைக்க வேண்டியது

    * உணவு
    * தூக்கம்
    * சோம்பல்
    * பேச்சு

    வெறுக்கக் கூடாதவர்கள்

    * தாய்
    * தந்தை
    * சகோதரன்
    * சகோதரி

    கடினமாக நடக்கக் கூடாதவர்கள்

    * ஆதரவற்றோர்
    * ஏழைகள்
    * முதியவர்கள்
    * நோயாளிகள்
    Next Story
    ×