search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோதண்டராமசாமி
    X
    கோதண்டராமசாமி

    சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி காலை 5 மணியில் இருந்து காலை 6 மணிவரை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    22-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.15 மணி வரை பிரம்மோற்சவ விழா கருட கொடிேயற்றம், 25-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அனுமன் வாகன சேவைக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 27-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கருடா வாகனத்துக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை வசந்தோற்சவம், காலை 10.30 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×