என் மலர்

    ஆன்மிகம்

    சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி
    X
    சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி

    வடலூர் சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மாத பூச ஜோதி தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. யூடியூப் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வடலூர் சத்திய ஞானசபையில் மாதந்ததோறும் பூசநட்சத்திரத்தில் மாத பூச ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மாத பூச ஜோதி தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய அதிகார பூர்வ யூடியூப் சேனலான https://www.youtube.com/channel/UCEiJoz GGHgOZFISkQAOB93A-ல் நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்படுகிறது.
    Next Story
    ×