
இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் கருதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவிலில் இருந்து சூடாமணி அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு தேர்த்திருவிழாவை காண வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.