search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கம்பகரேஸ்வரர்
    X
    கம்பகரேஸ்வரர்

    கும்பகோணம் கோவில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், திருபுவனம் கம்பகரேஸ்வரர், திருப்பனந்தாள் வீரியம்மன் ஆகிய 4 கோவில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், திருபுவனம் கம்பகரேஸ்வரர், திருப்பனந்தாள் வீரியம்மன் ஆகிய 4 கோவில்களில் பங்குனி உத்திர விழா 10 நாள் பிரம்மோற்சவமாக நடக்கிறது.

    தொடர்ந்து 4 கோவில்களின் கொடி மரத்திலும் கொடியேற்றப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்தி சாமிகள் கொடி மரம் முன்பு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு சாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா காலங்களில் 10 நாட்களும் காலை, மாலை நேரங்களில் சாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி ஓலை சப்பரம், 25-ந் தேதி இரவு திருக்கல்யாணம், 27-ந்தேதி தேரோட்டம் ஆகியவை நடக்கிறது.

    28-ந்தேதி பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தவாரி நடக்கிறது.

    அப்போது கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில் சாமிகளுக்கு பகல் 12 மணிக்கு மகாமகம் குளத்திலும், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் சாமிக்கு காவிரி ஆற்றிலும், திருப்பனந்தாள் வீரியம்மன் சாமிக்கு புஷ்கரணியிலும் தீர்த்தவாரி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×