search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
    X
    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

    பிரம்மோற்சவ விழா: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

    காரைக்கால் சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
    காரைக்கால் சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் விழா தடைபட்டது.

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    முன்னதாக பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்து கோவில் வாசலில் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19-ந் தேதி கொடியேற்றமும், 27-ந் தேதி தேரோட்டமும், 30-ந் தேதி அம்மையார் ஐக்கிய விழாவும் 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    Next Story
    ×