என் மலர்
ஆன்மிகம்

பவித்ர உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராஜகோபாலசாமி.
பவித்ர உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராஜகோபாலசாமி
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் நடந்த பவித்ர உற்சவத்தின்போது ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜகோபாலசாமியை தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற வைணவ கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசி தொடங்கி 10 நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
மற்ற மாதங்களில் நடைபெறும் பூஜை மற்றும் உற்சவங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை போக்குவதற்காக இந்த பவித்ர உற்சவம் நடைபெறுவதாக ஐதீகம்.
அதன்படி இந்த ஆண்டும் பவித்ர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 4-ம் நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ராஜகோபாலசுவாமி திருவந்திக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜகோபாலசாமியை தரிசனம் செய்தனர்.

Next Story