என் மலர்

    ஆன்மிகம்

    திங்கள்நகரில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் 6 பக்தர்கள் ஒரே வேலில் அலகுகுத்தி சென்றதை படத்தில் காணலாம்.
    X
    திங்கள்நகரில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் 6 பக்தர்கள் ஒரே வேலில் அலகுகுத்தி சென்றதை படத்தில் காணலாம்.

    குமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி போன்ற காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு சென்றன.

    இதையொட்டி மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் காவடி விழா நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமம், மாலையில் வேல்தரித்தல், இரவு காவடி பெரும் பூஜை, அலங்காரம் போன்றவை நடைபெற்றன.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தீபாராதனை, காலை 6 மணிக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பகாவடி திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் பறக்கும் வேல்காவடி விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், மாலை 5 மணிக்கு வேல்தரித்தல், இரவு 9 மணிக்கு காவடி பூஜை, அலங்காரம் நடந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது. மாலை 3.30 மணிக்கு யானை வரழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து மயில்காவடி, பறக்கும்காவடி, புஷ்பகாவடி ஊர்வலம் புறப்பட்டு அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு சென்றது.

    இதுபோல் சேரமங்கலம் ஆழ்வார்சாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    குளச்சல் கள்ளியடைப்பு பத்ரகாளியம்மன் கோவிலில் காவடிவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் பறக்கும் காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது. இதுபோல், குளச்சல் பாறக்கடை, சாம்பசிவபுரம், வெள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து பறக்கும்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டன.

    திங்கள்நகரில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி, பு‌‌ஷ்ப காவடி, சூரியக் காவடி, வேல் காவடி போன்ற காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டு சென்றது. இதையொட்டி நேற்று காலை முதல் திங்கள்நகரை சுற்றியுள்ள நெய்யூர், மேல்கரை, இரணியல்கோணம், இரணியல், செட்டியார்மடம், மணக்கரை, பேயன்குழி போன்ற கிராமங்களில் இருந்து காவடிகள் புறப்பட்டு திங்கள்நகர் ராதா கிரு‌‌ஷ்ணன் கோவில் முன்பு வந்து சேர்ந்தன. பின்னர் அங்கிருந்து மாலையில் திருச்செந்தூருக்கு ஊர்வலமாக புறப்பட்டன. இதில் 6 பக்தர்கள் ஒரே வேலில் அலகுகுத்தி சென்றனர். ஊர்வலம் இரணியல், கண்டன்விளை, பரசேரி, தோட்டியோடு, சுங்கான்கடை, பார்வதிபுரம் வழியாக திருச்செந்தூரை நோக்கி சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×