search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொன்வண்டு நிற பட்டாடையில் காட்சி அளித்த அத்திவரதரும், அலைமோதிய பக்தர்கள் கூட்டமும்
    X
    பொன்வண்டு நிற பட்டாடையில் காட்சி அளித்த அத்திவரதரும், அலைமோதிய பக்தர்கள் கூட்டமும்

    காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன நேரம் குறைப்பு

    காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று 14-வது நாளாக அத்திவரதர் பொன்வண்டு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை 2 மணிக்கே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.

    அத்திவரதரை தரிசிக்க 6 மணி நேரம் வரை ஆவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் 4 கி.மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டு இறக்கிவிடப்படுகிறார்கள்.

    அத்திவரதர் தரிசனம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை இருந்த தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அத்திவரதரை தரிசிக்க போலி பாஸ் பயன்படுத்தியது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வளாகத்திற்கு 20 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணைக்கிணங்க கூடுதலாக 10 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள மருத்துவ குழுக்களுடன் கூடுதலாக 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அத்திவரதரை நேற்று கேரள கவர்னர் சதாசிவம், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி, காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×