search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கலியுக வரதன் கீழ்ப்பாவூர் நரசிம்மர்
    X

    கலியுக வரதன் கீழ்ப்பாவூர் நரசிம்மர்

    தமிழகத்தில் கீழ்ப்பாவூர் நரசிம்மர் கோவிலில் மட்டும் 16 திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்க நிலையில் அபூர்வ வடிவச் சிறப்புடன் நரசிம்மர் காட்சி தருகிறார்.
    திருநெல்வேலி-தென்காசி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்னும் ஊருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழப்பாவூர்.

    தமிழகத்தில் இங்கு மட்டும் 16 திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்க நிலையில் அபூர்வ வடிவச் சிறப்புடன் அவர் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க வெண்கொற்றக் குடையுடன் தியானித்தபடி கம்பீரமாக வீற்றிக்கிறார்.
     
    ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று பிரதோஷ வேளையில் பூஜை இங்கு நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து இதில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் சகலவிதமான கஷ்டங்கள் நீங்கி பரிபூர்ண நிலை உண்டாகும்.
    Next Story
    ×