என் மலர்
ஆன்மிகம்

புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்
புதுக்கோட்டை கீழ3-ம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை கீழ3-ம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில்வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
14 நாட்கள் விழாவில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபஆராதனை நடக்கின்றது. மாலை நிகழ்ச்சி யில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி புறப் பாடு நடக்கின்றது.
முதல் நாளில் வாஸ்த்து, கடஸ்தாபனம், 2-ம் நாளில் காப்புக் கட்டி கொடியேற்றப்பட்டது. பின்னர்அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. 3-ம் நாளில் சிம்மவாகனத்தில் சாமி புறப்பாடும், 4-ம் நாளில் ஆஞ்சநேயர் வாகனத்தில் சாமிபுறப்பாடும் 5-ம் நாளில் கருட சேவையும் 6-ம் நாளில் சேஷவாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. 23.05.19 அன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. 27.05.19 அன்று மாலையில் ஊஞ்சல் சேவையும் நடை பெறுகின்றது.
விழா ஏற்பாடு களை திருக்கோவில் நிர்வாகிகள் ஆலய அர்ச்சகர் பாலாஜிபட்டாச்சாரியர் உட்பட பக்தர்கள் செய்கின்றனர், தினமும் நடக்கும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story