search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமர் உயிர் கொடுத்த கருப்பசாமி
    X

    ராமர் உயிர் கொடுத்த கருப்பசாமி

    கிராம மக்கள் வணங்கும் கிராம தேவதையில் மற்றொரு தெய்வம், கருப்புசாமி. பேச்சு வழக்கில் கருப்பசாமி என்று அழைக்கிறார்கள். இவரது தோற்றத்திற்கு ஒரு செவி வழி கதை சொல்லப்படுகிறது.
    கிராம மக்கள் வணங்கும் கிராம தேவதையில் மற்றொரு தெய்வம், கருப்புசாமி. பேச்சு வழக்கில் கருப்பசாமி என்று அழைக்கிறார்கள். இவரது தோற்றத்திற்கு ஒரு செவி வழி கதை சொல்லப்படுகிறது. ராமனால் காட்டிற்கு அனுப்பப்பட்டாள் சீதை. அங்கு அவளையும், அவளது பிள்ளையையும் காவல் காக்க, முனிவரால் தர்ப்பை மூலம் ஒரு குழந்தை படைக்கப்பட்டது.

    பின்னாளில் காட்டிற்கு வந்த ராமர், தன்னுடைய உண்மையான பிள்ளையை அறிவதற்காக அக்னி பரீட்சை நடத்தினார். அதில் தர்ப்பையில் உருவான குழந்தை எரிந்து கருகியது. பின்னர் அந்த தர்ப்பைக்கு ராமரே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினார். அவரே கருப்புசாமி என்கிறது அந்த செவி வழிக் கதை.

    கருப்பசாமிக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி சன்னிதி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கருப்பசாமிக்கு கோவில் உள்ளது. மேலும், கருப்ப சாமியை சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தெய்வமாகவே ஏற்று வழிபடுகிறார்கள். அங்கெல்லாம் அவர் கிராம தேவதையாகக் கருதப்படுவது இல்லை. இன்னொரு கதையின்படி கருப்பசாமி கருப்பாக இருப்பதனால், அவர் கிருஷ்ணரின் அவதாரம் எனவும், மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற பூமியில் கிருஷ்ணரே கருப்பசாமியின் உருவத்தில் அவதரித்து உள்ளார் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
    Next Story
    ×