என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி திருவிழா தொடங்கியது
    X

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி திருவிழா தொடங்கியது

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இங்கு ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருள்பாலிப்பதால் இக்கோவில் தென்னக அயோத்தி என்று அழைக்கப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராம நவமி திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தங்க கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லெட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் சாமி வீதி உலா, வேதபாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×