என் மலர்

  ஆன்மிகம்

  திருப்பாம்புரம் கோவிலின் 35 சிறப்பு தகவல்கள்
  X

  திருப்பாம்புரம் கோவிலின் 35 சிறப்பு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பாம்புரம் இறைவனுக்கு பாம்புரீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், பாம்புரேசர் என்றும் பெயர்கள் உண்டு. இந்த கோவிலின் 35 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
  1. இறைவனை மாதினை இடம் வைத்த எம் வள்ளல் என இத்தலத்தை தேவாரம் போற்றுகிறது.

  2. ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம் களத்திர தோஷம், புத்திர தோஷம், 18 வருட 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது, புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

  3. ஏனைய கோவில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராகுவும், கேதுவும் ஒரே உடலில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு.

  4. பாம்புரத்தில் பூஜை பண்ணிப் பதம் பெற்றோர் பன்னிருவர் என்று தல புராணம் குறிப்பிடுகிறது. ஆதிசேஷன், பிரம்மன், பார்வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட் சோழன் ஆகியோர் இந்தப் பன்னிருவர்.

  5. மகா சிவராத்திரி அன்று இரவு முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்துக்கும் வந்து வழிபட்டு ஆதிசேஷன் விமோசனம் பெற்றதாக வரலாறு.

  6. இந்த ஊரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும், யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராணம் கூறுகிறது.

  7. சுவாமி, அம்பாள், ராகு, கேதுவுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை முடிந்தபின் உளுந்துப் பொடி, கொள்ளுப் பொடி, அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.

  8. மகாசிவராத்திரி, ராகு, கேதுப் பெயர்ச்சி விழா இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  9. திருப்பாம்புரம் இறைவனுக்கு பாம்புரீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், பாம்புரேசர் என்றும் பெயர்கள் உண்டு.

  10. இறைவிக்கு பிரமராம்பிகை, வண்டார் குழலி, வண்டுசேர்குழலி, மாமலையாட்டி. வண்டார் பூங்குழலியம்மை என்ற பெயர்கள் இருக்கிறது.

  11. இத்தலத்தில் ராஜவிநாயகர், சட்டநாதர். ராகு-கேது ஏகசன்னதி. முருகன்-வள்ளி,தெய்வானை, வன்னிமரத்தடியில் ஆதி பாம்புரேசர்-வன்னீஸ்வரர் சன்னதி. திருமால், பஞ்சலிங்கங்கள், பிரமன், சோமாஸ்கந்தர், நடராஜர், சன்னதிகள் உள்ளன.

  12. சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.

  13. ராஜகோபுர வாயிலைத் தாண்டி உட்சென்றால் இடப்பால் திருமலையீசர் சன்னிதி உள்ளது. இக்கோயிலின் கன்னி மூலையில் நின்று பார்த்தால் திருவீழிமிழலை விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. தற்போது மரங்கள் மறைக்கின்றன.

  14. சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

  15. வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணி வித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

  16. மாசி மாதத்தில் - தீர்த்தவாரி - பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.

  17. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122-வது தேவாரத்தலம் ஆகும்.

  18. இந்தக் கோயிலில் மொத்தம் 15 கல்வெட்டுகள் உள்ளன. அதில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒன்று. அவரின் காலம் கி.பி.1178-1218 என்று இருப்பதால், இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று அறிய முடிகிறது.

  19. இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

  20. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக் கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

  21.திருபாம்புரம் தலம் சர்வதோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன.

  22. திருபாம்பு சுற்றிய புறம் என்பதே பெயர் மருவி திருப்பாம்புரம் என ஆகிவிட்டது.

  23. ராகுவையும், கேதுவையும் இணைத்துக் காட்டும் அஷ்டமகா நாகம் எனும் சிலை இத்தலத்தில் உள்ளது.

  24. திருப்பாம்புரம் ஆலயத்துக்கு விஜயம் செய்பவர்கள் முதல் ஜாமத்தில் குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரத்தில் நாக நாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தின் பாம்புர நாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி விட்டு வந்தால் மட்டுமே முழுமையானப் பலனைப் பெற முடியும் என்கிறார்கள்.

  25. தல விருட்சமான வன்னி மரத்தில் பிரார்த்தனைக்காக குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுகிறார்கள்.

  26. ஆதிசேஷன் இந்த தலத்துக்கு வந்தபோது இறைவனை துதித்து வழிபட அமைத்தக் குளமே சிற்றம்பலக் குட்டை என்ற பெயரில் உள்ள குளமாகும்.

  27. இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் நீண்ட காலமாக உடல் நலமற்று இருப்பவர்கள் உடல் நலம் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

  28. ஆலயத்துக்கு விஜயம் செய்தால் எங்கெங்கு எந்த வரிசையில் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்பதை எழுதி வைத்து உள்ளார்கள்.

  29. ஆலயத்தின் தல விருட்சமான வன்னி மரத்தடியில் உள்ள நாகத்திற்கு மஞ்சள் கட்டிய நூலைக் கட்டி தாலிபாக்கியம் பெற வேண்டுகிறார்கள்.

  30.ஆலய சன்னதியில் ராகு -கேது சன்னதி உள்ளது. இதன் முன்னால்தான் எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

  31. பாம்பு வழிபட்ட தலம் என்பதால் மூலஸ்தானத்தில் எப்போதாவது இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

  32. தல விருட்சமான பெரிய வன்னி மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

  33. சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம்.

  34. இத்தலத்திற்கு பாம்புரம் தென்காளஹஸ்தி என்ற பெயர் உண்டு.

  35. திருஞானசம்பந்தர் இயற்றி உள்ள இத்தலத்துக்கான பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×