search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்தி தரும் காசி விஸ்வநாதர்
    X

    முக்தி தரும் காசி விஸ்வநாதர்

    முக்தியை வழங்கும் தலங்களில் சிறப்பு மிக்கதாகவும், புண்ணியம் மிகுந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
    முக்தியை வழங்கும் தலங்களில் சிறப்பு மிக்கதாகவும், புண்ணியம் மிகுந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில். காசி யாத்திரை என்பது இன்றளவும் ஆன்மிக பயணமாக மட்டுமின்றி, புனிதம் மிகுந்த பயணமாகவும் இருக்கிறது.

    இங்குள்ள ஈசனின் அருளால் தான், சனீஸ்வர பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக ஆனதுடன், ஈஸ்வர பட்டத்தை யும் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. காசியில் உயிர் நீத்தவர்களின், காதில் இத்தல சிவபெருமானே பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்ற மந்திரத்தை ஓதி முக்தியடையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

    காசியில் கங்கை நதிக்கரையில் 64 படித்துறைகள் இருக்கின்றன. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஆதி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிறிய கருவறைக்குள் உள்ள இறைவனுக்கு பக்தர்கள், தாங்களே கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    Next Story
    ×