search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    16 ஆயுதங்களுடன் சக்கரத்தாழ்வார்
    X

    16 ஆயுதங்களுடன் சக்கரத்தாழ்வார்

    சக்கரத்தாழ்வாரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள் உள்ளது.
    திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட, உலகப் புகழ் வாய்ந்த திவ்விய தேசம் அழகர் மலை. இங்கே மூலவர், ஸ்ரீபரமஸ்வாதி ஸ்ரீசுதர்சனம் எனும் சக்கரத்துடனும், பாஞ்ச சன்யம் எனும் சக்கரத்துடனும், கௌமோதகீ எனும் கதாயுதத்துடனும், நந்தகம் என்ற வாளுடனும் சார்ங்கம் எனும் வில்லுடனும் காட்சியளிக்கிறார்.

    இதை சேவித்த பீஷ்மாச்சார்யா, சங்க சக்ர கதா கட்சி சார்ங்கதந்வா கதாதர எனக் கள்ளழகரை மங்களாசாசனம் செய்கிறார். ஆயினும், எவரால் எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று அறிய முடியாதவண்ணம், மிகப் பழைமையானவராகத் திகழ்கிறார் இந்தச் சக்கரத்தாழ்வார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு கருதி, மலையிலிருந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாரை அழகர்கோவிலின் உட்புறம் 3-ஆம் பிராகாரத்தில் தாயார் சந்நிதிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    ஜ்வாலா கேசம், த்ரிநேத்திரத்துடன் திகழும் இவரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள். இவரைச் சுற்றி ஷட்கோணம். இந்த அறுகோணத்தைச் சுற்றிலும் பீஜாஷர தேவதையர், வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனமாக பிம்ப ரூபத்தில் காட்சி தருகின்றார்.

    மனம், வாக்கு, காயம் என்று திரிகரண சுத்தியுடன் ஸ்ரீசுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், நினைத்தது யாவும் கைகூடும்.

    மேலும் புதன், சனிக்கிழமை ஆகிய விசேஷ நாட்களிலும், முடிந்தால் தினமுமேகூட ஸ்ரீசுதர்சன மூர்த்தியை சேவித்து, பழ வகைகள், பானகம், தயிர்சாதம், உளுந்து வடை முதலானவற்றை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கும் விநியோகித்து வழிபட்டு வரலாம். 
    Next Story
    ×