search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் அம்மையார்
    X
    காரைக்கால் அம்மையார்

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா இன்று தொடங்குகிறது

    காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது.
    இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் காரைக்கால் அம்மையார். இவர் காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீ பரமதத்தர் செட்டியாருக்கும், ஸ்ரீ புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறகிறது.

    27-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 
    Next Story
    ×