search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா
    X

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தாமிரபரணி புஷ்கர விழா குழுத்தலைவர் சென்னையை சேர்ந்த மகாலெட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புஷ்கர திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் தீர்த்த திருவிழா ஆகும். 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்கிறார்.

    குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும்போது விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணி நதியில் வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புஷ்கரமானவர் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் மகா புஷ்கரம் என்று கூறப்படுகிறது.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, அதேபோன்று தாமிரபரணி நதியை நினைத்தால், தரிசித்தால், ஸ்நானம் செய்தால், தீர்த்தத்தை பருகினால் எல்லா பாவங்களும் அகன்று முக்தி பெறலாம் என்று தாமிரபரணி மகாத்மியம் புகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட தாமிரபரணி நதிக்கரையில் 12 இடங்களில் இந்த மகா புஷ்கர விழா பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தாமிரபரணி மகா புஷ்கர விழா 12.10.2018 அன்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துகுமார சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் உள்ளிட்ட ஆதீன கர்த்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.

    விழாவில் அமைச்சர்கள், நெல்லை மாவட்ட கலெக்டர், அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சமய சான்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை தாமிரபரணி புஷ்கர விழாக்குழு சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×