என் மலர்
ஆன்மிகம்

கோடை திருநாள் விழாவில் கமலவல்லி நாச்சியார் புறப்பாடு நடந்த போது எடுத்த படம்.
கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் விழா தொடங்கியது
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் விழா தொடங்கியது. தாயார் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி மாலை 6.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வெளிக்கோடை மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது தாயாருக்கு புஷ்பம் சாத்துப்படி நடைபெற்றது. இதனை தாயார் கண்டருளினார். தீர்த்த கோஷ்டிகள் பாசுரங்களை இசையுடன் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு மேல் தாயார் வெளிக்கோடை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
வருகிற 10-ந்தேதி வரை வெளிக்கோடை திருவிழா நடைபெறுகிறது. அப்போது தினமும் தாயாருக்கு புஷ்பம் சாத்துப்படி நடைபெறும். வருகிற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை உள்கோடை திருநாள் விழா நடைபெறும். விழாவின்போது தாயார் தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி உள்கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். வருகிற 16-ந்தேதி நாச்சியார் வசந்த உற்சவ விழா தொடங்குகிறது. அன்று முதல் 22-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Next Story