என் மலர்

    ஆன்மிகம்

    மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம்பிடித்து இழுத்ததை படத்தில் காணலாம்.
    X
    மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம்பிடித்து இழுத்ததை படத்தில் காணலாம்.

    மணலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அய்யம்பேட்டை அருகே உள்ள மணலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    அய்யம்பேட்டை அருகே உள்ள மணலூர் மாரியம்மன்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×