என் மலர்

  ஆன்மிகம்

  சுசீந்திரம் கோவிலில் சித்திரை விசு கனிகாணும் நிகழ்ச்சி 14-ந்தேதி நடக்கிறது
  X

  சுசீந்திரம் கோவிலில் சித்திரை விசு கனிகாணும் நிகழ்ச்சி 14-ந்தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விசு கனிகாணும் நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
  குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின்படியும் நடைபெறுவது மரபு. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம்.

  இந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டும், கேரள புத்தாண்டும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வருகிறது. அதாவது வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.04 மணிக்கு தமிழ் மற்றும் கேரள புத்தாண்டுகள் பிறக்கிறது. இதையொட்டி மூலஸ்தானத்தில், தாணுமாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவபடம் காய்,கனிகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும். மேலும் பெரிய அளவில் நிலைக்கண்ணாடியும் வைக்கப்படும்.  மூலவராகிய தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்களை பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் அன்று ஒருநாள் மட்டும் அடுக்கி வைக்கப்படும்.

  இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மேலும், கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் கைநீட்டமாக காய், கனிகள் பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
  Next Story
  ×