என் மலர்

  ஆன்மிகம்

  வேளிமலை குமார கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது
  X

  வேளிமலை குமார கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேளிமலை குமாரகோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி தேவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
  வேளிமலை குமாரகோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி தேவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி அதிகாலையில் சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

  நண்பகல் 12 மணிக்கு குறவன் சமுதாயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், சமுதாய அர்ச்சனை, புஷ்ப பல்லக்கு அலங்காரம் நடக்கிறது. மதியம் 3 மணியளவில் சுவாமி வள்ளி தேவியுடன் மலையில் இருந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார். திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு தேன், தினை, மாவு, லட்டு பிரசாதமாக வழங்கப்படும்.

  இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடு இந்து குறவர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
  Next Story
  ×