என் மலர்

  ஆன்மிகம்

  மந்திர சக்திகளுக்கு அதிபதி
  X

  மந்திர சக்திகளுக்கு அதிபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை ஆதிகும்பேஸ்வரர் கோவில் நாயகிக்கு வழங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது ஆதிகும்பேஸ்வரர் கோவில். இங்குள்ள அன்னையின் பெயர் மங்களநாயகி என்பதாகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் அன்னைக்கு உண்டு.

  திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை ‘வளர்மங்கை’ என்று அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.  அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திர பீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்பாளுக்குரிய 51 சக்தி பீடங்களில் இது முதன்மையானதாக கூறப்படுகிறது.

  ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இங்குள்ள மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  Next Story
  ×