என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் தேரோட்டம்
By
மாலை மலர்7 March 2017 4:26 AM GMT (Updated: 7 March 2017 4:26 AM GMT)

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பெரியகாண்டியம்மனை வீரப்பூர் கோவில் முன்பு உள்ள தேருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தேருக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்பின் காலை 11.40 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. தேர், ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. அப்போது கோவிலின் முன்பும், தேர் சென்ற வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தேரின் மீது பூமாலைகள், நெல் மற்றும் தானியங்களை வீசி பயபக்தியுடன் வழிபட்டனர்.
நிகழ்ச்சிகளை நாடக்காப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் விடவை திருவாசக வெ.நல்லுசாமி தொகுத்து வழங்கினார்.
தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு படையினரும், மின்வாரிய அலுவலர்களும், பணியாளர்களும் வீரப்பூரில் முகாமிட்டு பணியாற்றினர். அதுமட்டுமின்றி தமிழக அரசின் மருத்துவ குழுவினரும் பங்கேற்று சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சத்தாவர்ணம் என்ற மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவு பெறுகிறது.

Next Story
×