search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மத்தியபுரி அம்மனும், நன்மைதருவாருடன் பிரியாவிடையும் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த காட்சி.
    X
    மத்தியபுரி அம்மனும், நன்மைதருவாருடன் பிரியாவிடையும் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த காட்சி.

    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 9-ந்தேதி திருக்கல்யாணம்

    மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மைதருவார் திருக்கோவிலில் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாளை மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    இறைவன் தன்னைத்தானே தோற்றுவித்து வழிபட்ட பெருமை உடையதாக கருதப்படும் மத்தியபுரி அம்பாள் எனும் பெயரில் மீனாட்சிஅம்மன் சமேத இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மேலமாசிவீதியில் உள்ளது. இத்தகைய பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் வருடந்தோறும் ஒவ்வொரு மாதமும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மாசி பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் சாமி, அம்பாளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் ஞானசம்பந்தருக்கு பாலுட்டும் நிகழ்ச்சியும், இரவு சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலையும், தொடர்ந்து நாளை காலை பிச்சாடனர் திருக்கோலத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது.



    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்று, மதியம் 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் நான்கு மாசி வீதிகளில் சாமி, அம்பாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர். 10-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெற்று, மாலையில் பிரதோஷ வழிபாடு முடிந்து, இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர்.

    11-ந்தேதி காலை தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்குதல், மவுன பலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் நிறைவு நாளான 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு உற்சவ சாந்தி நடைபெற்று, பகல் 12 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்படுகின்றன. திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்களும், ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×