என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தபோது எடுத்த படம்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
By
மாலை மலர்2 Feb 2017 6:10 AM GMT (Updated: 2 Feb 2017 6:10 AM GMT)

நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 9-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் தை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் பாரதி, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், நாகராஜா கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், சுவாமி பத்மேந்திரா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கொடியேற்று பூஜை, பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடு, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மங்கள இசை, பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல் போன்றவை நடைபெற்றது. வருகிற 10-ந் தேதி வரை இந்த திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், அபிஷேக பூஜை, ஆன்மிக சொற்பொழிவு பக்தி இன்னிசை நடைபெறுகிறது. மேலும் சாமி ஒவ்வொரு நாள் இரவில் புஷ்பக விமானம், சிங்க வாகனம், கமல வாகனம், ஆதிசேஷ வாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், அன்ன வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
வருகிற 9-ந் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. 11 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணி முதல் 10 மணி வரை நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9.45 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழாவான 10-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை சங்கீத நாத இசை சங்கமம், இரவு 8.30 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கொம்மண்டை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது.

Next Story
×