என் மலர்
ஆன்மிகம்

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சிதம்பரம் கோவிந்தராஜபெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்குள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் கோவிந்தராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து, உள்பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் காட்டுமன்னார் கோவிலில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 5 மணிக்கு நடந்தது. இதையொட்டி சுந்தர கோபாலசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுந்தர கோபால சாமி அலங்கரிக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதேபோன்று கோவிலில் உள்ள கண்ணாடி அறையில் செண்பகமன்னனார் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
சேத்தியாத்தோப்பு பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story