என் மலர்
ஆன்மிகம்

திருப்பாற்கடல் பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணலாம்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பாற்கடல், பள்ளி கொண்டா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பாற்கடல், பள்ளிகொண்டா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்றே சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பிறவி எனும் சுழற்சியில் இருந்து மனிதன் விடுபட்டு பிறவா நிலை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய ஏகாதசி விரதம் கடைபிடிக்கிறார்கள். இவ்வாறு விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக வந்தால் மோட்சம் கிடைக்கும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு பெற்ற வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இது 107-வது திவ்யதேசமாக விளங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பிரசன்னவெங்கடேச பெருமாள் மற்றும் இதர மூர்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் பிரசன்னவெங்கடேச பெருமாளுக்கு திருப்பதி பெருமாள் போன்றுஅலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என முழங்கியவாறு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் சொர்க்கவாசல் வழியாகவும் அவர்கள் வந்தனர். நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதிய வண்ணம் இருந்தது. இதனையொட்டி பக்தர்களுக்கு துளசி மற்றும் துளசிதீர்த்தம் வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அதிகாரி மணிவண்ணன், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ., கோ.அரி எம்.பி.மற்றும் பிரமுகர்களும் கோவிலில் தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கவனித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இதேபோல் பள்ளிகொண்டாவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உத்திரரங்கநாத கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மூலவர் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. நேற்று அதிகாலை உற்சவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சரியாக காலை 6 மணிக்கு மூலவர் முத்தங்கி சேவையுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது கடுங்குளிரிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கத்துக்கு இணையாக மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்து. காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபில், கலெக்டர் ராமன், முன்னாள் எம்.எல்.ஏ.கலையரசு, ஆவின் தலைவர் வேலழகன், வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி, நகர அ.தி.மு.க.செயலாளர் உமாபதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உற்சவ சேவா சங்கம் சார்பில் லட்டுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அசோக்குமார் (வேலூர்), தக்கார் கோவிந்தராஜு, வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் குமரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

Next Story