என் மலர்

  ஆன்மிகம்

  சங்கரரை ஷண்மத ஸ்தாபகர் என்று அழைக்க காரணம்
  X

  சங்கரரை ஷண்மத ஸ்தாபகர் என்று அழைக்க காரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கரர் ஆறு சமயங்களையும் சீர்திருத்தி அவற்றை நாடெங்கும் பரப்புவதற்குத் தம்முடைய சீடர்கள் அறுவரை அனுப்பினார். இதனால் அவரை ஷண்மத ஸ்தாபகர் என்று அழைக்கின்றனர்.
  காஞ்சியில் வாழ்ந்த போது சங்கரர் அரும் பெரும் செயல் ஒன்றை ஆற்றினார். அக்கினி, குபேரன், பிரம்மன், மன்மதன், யமன், வருணன், வாயு போன்ற தேவர்களை வழிபட்டு வந்த மதங்கள் மொத்தம் எழுபத்திரண்டு இருந்தன.

  சங்கரர் அவற்றிலிருந்த வேத விரோதமான ஆசாரங்களை நீக்கினார். இந்து மதத்தின் முக்கிய கிளை மதங்களாகக் கருதப்படுபவை. ஆறாகும், அவை சைவம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம்,, சௌரம், சாக்தேயம் என்பனவாகும்.

  சிவனை வழிபடுவது சைவம், விஷ்ணுவாம் திருமாலை முக்கியக் கடவுளாகக் கொண்ட சமயம் வைணவம், கணபதியை வழிபடும் மதம் காணாபத்தியமாகும். குமரக் கடவுளை வழிபடுவோர் மதம் கௌதாரம், சக்தியே அனைத்தும் என்று வலியுறுத்தும் சமயம் சாக்தேயம், சூரியனை வழிபடும் மதமோ, சௌரமாகும்.

  சங்கரர் அந்த ஆறு சமயங்களையும் சீர்திருத்தினார். அவற்றை நாடெங்கும் பரப்புவதற்குத் தம்முடைய சீடர்கள் அறுவரை அனுப்பினார். இதனால் அவரை ஷண்மத ஸ்தாபகர் என்று அழைக்கின்றனர்.
  Next Story
  ×