என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மருதமலை முருகன் பெயர் சிறப்புகள்
    X

    மருதமலை முருகன் பெயர் சிறப்புகள்

    காஞ்சி புராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
    முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் மருதமலை பகுதிக்கு வந்தார். அதிக தாகத்தாலும் களைப்பாலும் துன்புற்று மருத மரத்தின் அடியில் இளைப்பாறினார். அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது. இந்த அதிசயம் கண்ட சித்தர் மகிழ்ச்சி அடைந்தார்.

    முருகனின் திருவருளே அதற்கு காரணம் என்று மகிழ்ந்த சித்தர் முருகப்பெருமானை மருதம்+ சலம்(நீர்) ஆகியவற்றின் தலைவா என வாழ்த்தி பாடினார். அதுவே காலப் போக்கில் மருதாசலபதி என மருவி அழைக்கப்படுகிறது என்பர்.

    அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும். எனவே மருத மரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாசலம் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கருதலாம். எனவே கி.பி.12&ம் நூற்றாண்டில் மருதமலை கோவில் அமைக்கப்பட்டது என்றும் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளுள் ஒன்றான ஆறை நாட்டின் எல்லை யாக மருதமலை இருந்தது என்றும் அறியலாம்.

    பேரூர் புராணம், காஞ்சி புராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.




    Next Story
    ×