என் மலர்

  ஆன்மிகம்

  பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தினமும் 108 மோதகம் படையல்
  X

  பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தினமும் 108 மோதகம் படையல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தினமும் 108 மோதகம் படைக்கின்றனர்.
  வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். மற்ற விநாயகரின் உருவத்திலிருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.

  குடைவரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது. இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார். கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.

  உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார். இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது. தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.
  Next Story
  ×