என் மலர்

  ஆன்மிகம்

  புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
  X

  புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது.
  தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. இந்த திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையை கவுன்சிலர் மேத்தா தொடங்கி வைத்தார்.

  முன்னதாக முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன்பிள்ளை, வைத்திலிங்கம், கந்தசாமி, பாலமுருகன், சோமசுந்தரம், செந்தில் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×