என் மலர்

  ஆன்மிகம்

  திருப்புல்லாணி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
  X

  திருப்புல்லாணி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள மேதலோடை கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழாவில் கிராமிய ஒயிலாட்டம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள மேதலோடை முத்து மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், பெண்கள் வீட்டில் வளர்த்த முளைப்பாரிகளை கோவிலுக்குள் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  தொடர்ந்து அம்மனுக்கு இளநீர் காவடி, மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும் வழிபட்டனர் ஒயிலாட்டக் குழுத் தலைவர் துரைசாமி தலைமையில் கிராமிய ஒயிலாட்டமும், பெண்களின் கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  பின்னர் பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்று ஊரணியில் கரைத் தனர்

  கிராமத்தலைவர் நவநீதன், பூசாரி செல்வம், பசுமலை, கோவிந்தன். ராஜமாணிக்கம், தினகர்ராஜ், ரத்தினம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×