என் மலர்
வழிபாடு

மார்த்தாண்டத்தில் 12 ஜோதிர்லிங்கம் தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
- புகழ்பெற்ற 12 ஜோதிர் லிங்கம் மற்றும் சகஸ்ர லிங்கங்கள் இடம் பெற்றிருந்தன.
- தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் மார்த்தாண்டம் அருகே குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 12 ஜோதிர் லிங்கம் மற்றும் சகஸ்ர லிங்க தரிசனம் நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற 12 ஜோதிர் லிங்கம் மற்றும் சகஸ்ர லிங்கங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தரிசன நிகழ்ச்சி கடந்த 6-ந்தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை அதன் பொறுப்பாளர் கோகிலா தொடங்கி வைத்தார். இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story






