search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கை
    X
    துர்க்கை

    நம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.
    துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்கையின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், நம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளுவாள். கஷ்டங்களையெல்லாம் போக்கித் தருவாள்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் துர்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளலாம். காலையும் மாலையும் சொல்லி வணங்கி வழிபடலாம்.

    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தந்நோ துர்கி ப்ரசோதயாத்

    அதாவது, காத்யாயயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.

    இந்த துர்கை காயத்ரியை தினமும் சொல்லுங்கள். முடிந்தால் 108 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி.
    Next Story
    ×