search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யட்சிணி தேவதை
    X
    யட்சிணி தேவதை

    யட்சிணி தேவதை வசிய மந்திரம் சொல்லும் முறை

    “யட்சிணி தேவதை வசிய மந்திரம்” மிகவும் பிரபலமானது. நாம் விரும்பும் பல விடயங்களை வழங்க வல்லது. இந்த யட்சிணி தேவதை வசிய மந்திரம் உபாசனை முறைகளை தெரிந்து கொள்வோம்.
    யட்சிணி மந்திரத்தை உபாசனை செய்வதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் சொந்த வீடு உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் பூஜையறையில் இந்த மந்திர உபாசனை செய்ய வேண்டும். வாடகை வீட்டிலிருப்பவர்கள் யட்சணி உபாசனையில் ஈடுபட்டு அதில் சித்தி ஏற்பட்டால், மந்திர சித்தியின் பாதி சக்தி அந்த நிலம் அல்லது வீட்டின் உரிமையாளருக்கு சென்று விடும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் யட்சிணி மந்திர உபாசனை செய்வதை பற்றியோ அல்லது அந்த மந்திரத்தையோ சொல்லக்கூடாது. இந்த உபாசனை செய்யும் காலத்தில் போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு, மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்ல பலனை தரும். இம்மந்திரத்தை உங்கள் பூஜையறையில் உபாசிக்கும் போது இறந்து போன உங்கள் முன்னோர்களின் எந்த ஒரு புகைப்படங்களும் இருக்க கூடாது.

    யட்சிணி மந்திரம் – காலை

    “ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா
    வா ஐயும் க்லீம் சிவசிவ மோகினிநசி நசி மசி மசிசுவாகா“

    யட்சிணி மந்திரம் – மாலை

    ”ஓம் ஸ்ரீம் க்லீம் சர்வயட்சிணி ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்
    மோகினியட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா

    யட்சிணி உபாசனையை ஒரு முழு பௌர்ணமி தினத்தன்றே தொடங்க வேண்டும். அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, உங்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின்னர் உங்கள் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, பழங்கள், பூக்கள் மற்றும் ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை படையல் வைத்து, பலா மரம் அல்லது வில்வ மர பீடத்தில் ஒரு வெள்ளை துணி பரப்பி, அதில் கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் இம்மந்திரத்தை 1008 எண்ணிக்கையில் உரு ஜெபிக்க வேண்டும். மாலை வேளையில் மேற்சொன்ன முறையில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு மந்திர உரு ஜெபிக்க வேண்டும்.

    Next Story
    ×