search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கை
    X
    துர்க்கை

    துன்பம் போக்கும் துர்கா தேவி சரணம்

    துர்கா தேவிக்கு உகந்த இந்த பாடலை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    ஜெயஜெயதேவி
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
    துன்பம் பறந்தோடும்
    தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம்
    கண்டால் போதும்
    கர்ம வினைகளும் ஓடும் சர்வமங்களம் கூடும்
    பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை
    சுற்றிவரும் பகைவிரட்டும்
    நெற்றியிலே குங்குமப் பொட்டும் வெற்றிப்
    பாதையைக் காட்டும்
    ஆயிரம் கண்கள் உடையவளே
    ஆதிசக்தியவள் பெரியவளே
    ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாயைப்
    போல் நம்மை காப்பவளே
    சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும்
    வாளும் வேலுடன், சூலமும்
    தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அவள் தங்க
    கைகளில் தாங்கி நிற்பாள்
    சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
    திங்களை முடிமேல் சூடி நின்றாள்
    கருணைக் கண்கொண்டு பார்த்திருப்பாள்
    மங்கள வாழ்வு தந்திடுவாள்
    திருமகள் கலைமகள் அவளே திருவருள்
    புரியும் மலைமகளும் அவளே
    அங்கயற் கண்ணியும் மங்கயற்கரசியும் அவளே
    முண்டக கண்ணியும் அவளே அபிராமி
    அம்மையும் அவளே
    ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
    கனக துர்காதேவி சரணம்! கனக துர்காதேவி சரணம்.
    Next Story
    ×