
க்ரஹாதிபதயே பெளமாய ஸ்வாஹா
அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 துதித்து வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு மற்றும் சொந்தமாக நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான்.