என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனிபகவானால் ஏற்படும் சங்கடங்களை போக்கும் எளிய ஸ்லோகம்
    X

    சனிபகவானால் ஏற்படும் சங்கடங்களை போக்கும் எளிய ஸ்லோகம்

    உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.
    அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

    சனி துதி

    சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
    மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
    சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
    இச்செகம் வாழ இன்னருள் தா! தா!
    முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
    மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
    கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
    சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
    சகலரும் துதித்திடும் சனியே போற்றி
    புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
    நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
    செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!

    Next Story
    ×